பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் காயம்!

Print lankayarl.com in இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

அவ்வகையில், ஜம்மு பகுதிக்குட்பட்ட ரஜோரி மாவட்டம், சுந்தர்பானி செக்டர் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு சாவடிகளின் மீது இன்று காலை சுமார் பத்து மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் பதிலடி தந்தனர்.

இதேபோல், கத்துவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச ஹிராநகர் செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.