இறந்தபடி பனையில் தொங்கிய கூலித்தொழிலாளி:கிருஷ்ணகிரியில் சோகம்

Print lankayarl.com in இந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பனை மரத்தின் உச்சியில் தலைகீழாக தொங்கியபடியே பனை மரம் ஏறும் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

50 வயதான கணேசன் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர்.இவர் பனைமரம் ஏற்டும் தொழிலாளி இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை பதநீர் எடுக்க மரத்தில் ஏறினார்.திடீரென அவர் பனை உச்சியிலிருந்து தலைகீழாக தொங்கியுள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார் அவர் கீழே விழுந்து விடாமல் இருக்க பனையை சுற்றி வலையை கட்டி அவரை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் அவரை மீட்க எடுத்த அந்தாளு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.இதனால் ஜேசிபி மூலம் பனை மரத்தை மோத முடிவு செய்து அதன்மூலம் அவரை மீட்டு அருகிலுள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்

எனினும் கணேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.பானையில் இருக்கும் போதே அவர் இறந்திருக்கலாம் என தெரிவிக்க பட்டது இது தொடர்பான விசாரணைகளை சாமல்பட்டி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.