லாரியுடன் மோதிய பேரூந்து:6 பேர் பலி

Print lankayarl.com in இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேரூந்து ஒன்று லாரி உடன் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கான்பூரில் இருந்து அலகாபாத் நோக்கி பயணம் செய்த அரசு பேரூந்து கல்யாண்பூர் பகுதியில் உள்ள மவ்ஹர் கிராமத்தின் அருகே டயர் பஞ்சரானதில் நிலைகுலைந்து எதிரே வந்த சிமெண்ட் லொரி மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.மேலும் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது