பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை..!

Print lankayarl.com in இந்தியா

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், செல்போன் பயன்படுத்த கூடாது என்று அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களுக்கும் டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் போக்குவரத்து காவலரை துரத்திச் சென்று விபத்தில் சிக்க வைத்த ஆய்வாளர் ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தேனாம்பேட்டை போக்குவரத்து காவலர் தர்மராஜன் என்பவர், விடுமுறை கிடைக்காத விரக்தியை வாக்கி டாக்கி மூலம் வெளிப்படுத்தினார்.

இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கடந்த 21 ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த தர்மராஜை துரத்திப் பிடித்து விபத்தில் சிக்க வைத்தார்.

இதன் காரணமாக ரவிச்சந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தர்மராஜின் மனைவி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.